Tuesday 18 August 2015

நாக வழிபாடு! நாகவழிபாட்டின் சிறப்பு ! நாகராஜா வழிபாடு! நாக பஞ்சமி! கருட பஞ்சமி

குடும்பத்தில் வளமும் அதிர்ஷ்டமும் பெருகிட, நீர்வளம், நீடித்த ஆயுள், நிறைந்த செல்வம் ஆகியவற்றைத் தரும் தெய்வம்

நாக வழிபாடு

பாம்புகளால் நிலம் வளம்பெறுகிறதென்றும், பாம்புகளை வழிபடுவதால் தங்கள் குடும்பத்தில் செல்வவளம் பெருகி நிலைக்குமென்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கோவில், குளக்கரை அல்லது அரச மரத்தடி போன்ற இடங்களில் பாம்பு வடிவம் செதுக்கப் பட்டகற்கள் நடப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாகராஜாவை தெய்வமாக வழிபடும் வழக்கம் காலம்காலமாக தொடர்ந்து வந்துள்ளது.

உன்னத பலன் தரும் நாக பஞ்சமி! 
நாகங்களை கௌரவித்து வழிபடுவதற்காக கொண்டாடப்படும் உற்சவமே நாக பஞ்சமி. ஆடி மாத வளர்பிறை பஞ்சமி யன்று இது கொண்டாடப்படுகிறது. ஹேமாத்ரி என்ற சமஸ்கிருத கிரந்தத்தில், நாக பஞ்சமியன்று நாக பூஜை செய்யும்போது அனுஷ்டிக்கப் படவேண்டிய நியமங்கள் கூறப்பட்டுள்ளன. பஞ்சமிக்கு முதல் நாளாகிய சதுர்த்தியன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். பஞ்சமியன்று பகலில் உண்ணாமல் இரவு மட்டுமே உண்ண வேண்டும். வெள்ளி, மரம், மண், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் நாக உருவத்தைச் செய்து பூஜையில் வைத்து வழிபட வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் பாம்புக் கோலமிட்டு அலரி, மல்லிகை, செந்தாமரை போன்ற மலர்களாலும் சந்தனப்பொடி போன்ற வாசனை திரவியங் களாலும் பூஜை செய்யவேண்டும். அஷ்ட நாகங்களாகிய அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், பிங்களன், சங்கன், பத்மன், மஹாபத்மன் ஆகியவை இன்னமும் பூமியில் வாழ்வதாக மக்கள் நம்புவதால், இவை எட்டும் பூஜிக்கப்படுகின்றன. அன்றைய தினம் அன்னதானம் செய்வது சிறப்பானதென கூறப் பட்டுள்ளது.

நாகபஞ்சமியன்று பெண்கள் விடியற் காலையில் எழுந்து நீராடி தேன், பால் ஆகியவற்றை நாகத்துக்குப் படைத்து வழிபடுவர். இவ்வாறு வழிபடுவதால் மலடு நீங்கி புத்திர பாக்கியம் பெறலாம் என்பது நம்பிக்கை. இந்த நாளில் நாகதோஷமுள்ள பெண்கள் விரதமிருந்து பூஜை செய்வார்கள். பாம்புப் புற்றை வணங்கிவிட்டு வரும்போது, சிறிது புற்று மண்ணை எடுத்துவருவார்கள். வீட்டிற்கு வந்ததும் அந்த மண்ணுடன் சிறிதளவு அட்சதையைக் கலந்து மூத்த சகோதரர்களிடம் ஆசிபெறுவர். சகோதரர் கள் இளையவர்களாக இருந்தால், சகோதரி கள் அவர்களை ஆசீர்வாதம் செய்வார்கள். சகோதரிகளுக்கு சகோதரர்கள் அன்பளிப்பு கள் வழங்கி மகிழ்வர்.
நாகங்களுக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாக நம்பப்படுவதால், பாம்புகள் உரிக்கும் தோலுறைகளைப் புனிதமானதாகக் கருதி பாதுகாக்கும் வழக்கமும் உண்டு. ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய நாட் களில் நாக வழிபாடு செய்வதும் வழக்கமாக இருந்துவருகிறது. இந்துக் கடவுளரோடு தொடர்புபடுத்தி நாகங்கள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. விநாயகர் கையில் மற்ற ஆயுதங்களோடு நாகாபரணம் தரித்து விளங்குவதையும், சிவபெருமான் கழுத்தில் பாம்பை மாலையாக அணிந்திருப்பதையும் காண்கிறோம். யமுனையை விஷமாக்கிய காளிங்கன் என்ற நாகத்தின் தலைமேல் கிருஷ்ணபகவான் நர்த்தனம் செய்து, யமுனை நதியிலிருந்து அவனை விரட்டி நீரை சுத்தமாக்கியதோடு, சாபத்தினால் நாகமான காளிங்கனுக்கு விமோசனமளித்த நிகழ்வை ஸ்ரீமத் பாகவதத்தின் மூலம் அறிகிறோம். அஸ்தினாபுர மன்னன் ஜனமேஜயன் முதன்முதலில் பாம்பு யக்ஞம் செய்தான் என்ற செய்தியும் மகாபாரதத்தில் கூறப்படுகிறது.

நாக பஞ்சமியன்று நிலத்தை உழக்கூடாது என்பது சம்பிரதாயம். எலிகளைத் தேடி பாம்புகள் நிலத்தில் சுற்றிவரும்போது, கலப்பையின் நுனி அதன் உடலில் பட்டு துன்பம் நேரிட்டுவிடக்கூடாது என்பதற் காகவே அன்றைய தினம் நிலத்தை உழுவ தில்லை. இதைப்பற்றிய வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. ஒரு விவசாயி நிலத்தை உழுதுகொண்டி ருந்தான். அப்போது கலப்பையின் நுனியில் சிக்கி சில பாம்புக்குட்டிகள் இறந்தன. பின்னர் அங்குவந்த தாய்ப்பாம்பு தன் குட்டிகள் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. விவசாயிதான் இதற்குக் காரணமென்பதை ஊகித்த பாம்பு, அவனையும் அவன் குடும்பத்தினரையும் கடித்து மரணமடையச் செய்து பழிவாங்கியது. விவசாயியின் மகள் அந்த ஊரிலிருந்து வெகு தூரத்திலுள்ள கிராமத்தில் வசித்துவந்தாள். அவளைக் கொல்வதற்காக பாம்பு அங்குசென்றது. அந்நேரம் விவசாயியின் மகள் அவளது வீட்டில் நாகபூஜைக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தாள்.  அதைக்கண்ட பாம்பு சற்று தயங்கியது. பூஜை செய்யுமிடத்தில் நாகம் வந்திருப்பதைக் கண்ட அந்தப் பெண் மகிழ்ந்து அதை வணங்கினாள். அப்போது பாம்பு, ""உன் தந்தை செய்த தவறால் என் பிள்ளைகள் இறந்துபோனார்கள். அதற்காக உன் குடும்பத்தினர் எல்லாரையும் பழிவாங்கிவிட்டேன். எஞ்சியிருப்பது நீ மட்டும்தான். உன்னைக் கொல்லவே இங்கு வந்தேன். ஆனால் நீ நாகபூஜை செய்பவள் என்றறிந்து தயங்கி நிற்கிறேன்'' என்றது. அந்தப் பெண் நாகத்தை பலவாறு பூஜித்து, ""என் தந்தை அறியாமல் செய்த பிழையை மன்னித்து அவர்களை உயிர்பெறச் செய்யவேண்டும் தாயே'' என்று மனமுருகி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு மனமிரங்கிய பாம்பு, அவளது குடும்பத்தினரை உயிர்பெற்றெழச் செய்தது. அதன்காரண மாகவே நாகபஞ்சமியன்று பண்டிகை முடிவடையும்வரை நிலத்தை உழக்கூடாதென்ற மரபு உறுதியாகப் பின்பற்றப்பட்டுவருகிறது.

இவ்வரலாற்றின் மூலம் நாகவழிபாட்டின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.

நாகப்பாம்புகளை தெய்வமாகவே மக்கள் கருதுகின்றனர். வீட்டுச் சுவர்களில் நல்ல பாம்பின் உருவம் வரைந்து, அதை மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அலங்கரித்து, உரிய நிவேதனம் படைத்து வழிபடுவார்கள். அதேபோல பாம்புப் புற்றை மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து, புற்றுக்குள் பாலூற்றி நாகராஜாவை வழிபடு வார்கள். நாகத்தை முறைப்படி வழிபட்டால் குடும்பத்தில் வளமும் அதிர்ஷ்டமும் பெருகுமென்பது நம்பிக்கை. புத்திரப்பேறு வேண்டி பிரார்த்திக்கும் பெண்கள் விரதமிருந்து அரச மரத்தை 108 முறை வலம்வருவார்கள். வேண்டுதல் நிறைவேறி அந்தப் பெண் தாயானதும், பாம்பு உருவம் செதுக்கிய நடுகல்லை அந்த அரசமரத்தின்கீழ் வைத்து தன் நேர்த்திக்கடனை நன்றியுடன் நிறைவேற்றுவாள். நாக பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படும் மற்றொரு பண்டிகை கருட பஞ்சமி. பட்சிகளின் ராஜாவான கருடன் நாகங்களின் பிறவி எதிரி. கருட பஞ்சமி விரதமிருந்து பாம்புப் புற்றையும் வழிபடுவதன்மூலம் பாம்புகளிடமிருந்து பாதுகாப்பு பெறலாம் என்பது நம்பிக்கை. இந்தியா மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும், நீர்வளம், நீடித்த ஆயுள், நிறைந்த செல்வம் ஆகியவற்றைத் தரும் தெய்வமாக எண்ணி நாகத்தை மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.

பஞ்சமியன்று நாகரையும், கருடனையும் வழிபட்டு சகோதர- சகோதரிகளின் அன்பையும் ஆசியையும் பரிமாறிக்கொண்டு வளமான வாழ்வு பெறுவோம்.


நாகசதுர்த்தி  வழிபாடு

நாகராஜ துதி

ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம் ஸகம்பலம்
ஸங்கபாலம் த்ருதராஷ்டிரம்: தட்சகம் காளியம் ததா:
ஏதானி நவ நாமானி சமகாத்மனாம் சாயங்காலே படேந்நித்யம்
ப்ராதாகாரல விசேஷதக நஸ்யவிஷ பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!


அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், சங்கபாலன், த்ருதராஷ்டிரன்,  தட்சகன், காளியன் முதலான ஒன்பது நாக  ராஜாக்களே நமஸ்காரம். ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக தோஷங்களை விலக்கி நற்கதி அருள்வீராக.  தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும்  நாகராஜனின் ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகி பலன் பெறலாம்.
"நாகராஜ மஹாபாகு ஸர்வா பீஷ்ட பலப்ரத நமஸ்கரோமி
தேவேச த்ராஹிமாம் கருணாநிதே உமா கோமள ஹஸ்தாப்ய
ஸம்பாவித லலாடகம் ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் பஷ்கரஸ்ரஜம்'.


ஆடி மாதத்தில் நாக பூஜை 

நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம். ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி திதி கருட மற்றும் நாக பஞ்சமி என
அழைக்கப்படுகிறது. பறவைகளில் கருடனையும் மற்றும்  நாகப் பாம்பையும் போற்றி வழிபடுவதற் கென்று ஏற்பட்டுள்ள பண்டிகையாக நாக சதுர்த்தியும் கருட பஞ்சமியும்திகழ்கின்றன.  நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்து பால் அபிஷேகம் செய்து  மஞ்சள் பூசிக் குங்குமம் வைத்து  பால், முட்டை முதலியவற்றை நிவேதன பொருளாக வைத்து வழிபடுவார்கள். மூன்று அல்லது ஒன்பது முறை கோவிலை சுற்றி வலம் வந்து  நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் இந்த விரதத்தை பின்பற்ற வேண்டும். யமுனை நதியில் வாழ்ந்துவந்த காளிந்தீ என்ற நாகத்தினால்  மக்களுக்கு ஏற்பட்ட இன்னல் களுக்கு முடிவு கட்ட கிருஷ்ணர் அந்தப் பாம்பினை அடக்கி, அதன் மீது நர்த்தனம் ஆடிக் களித்தாராம். அவ்வாறு காளிந்தீ நர்த்தனம் செய்த நாளே நாக பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.  காஸ்யபருக்கும், கத்ருவுக்கும் பிறந்த நாகர்.  தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கவே கோபம் கொண்ட தாயர் கத்ரு தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து இறந்து போகும்படிமகனுக்கு சாபம் கொடுத்தாள். ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் நிறைவேறியது பரீட்சித் மகாராஜாவின் புதல்வன் ஜனமேஜயன்,தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான நாகராஜன் தட்சகனைப் பழி தீர்க்கவும்,
பாம்பு இனத்தையே பூண்டோடு ஒழிக்கவும சபதமிட்டுசர்ப்ப யாகம் -  `சர்ப்பயக்ஞம்' என்ற வேள்வியை நடத்தினான்.  பல பாம்புகள் அவன் நடத்திய வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி  கொடுத்த நாள் நாக சதுர்த்தி பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்து கற்பூர ஆராதனை செய்தல்  நாகசதுர்த்தியில் விரதம் இருந்தால் நாகதோஷம் விலகும். அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, கோரிக்கைளை நிறைவேற்றித் தரும்படி நாகசதுர்த்தி நாளில் வேண்டிக்கொள்ளலாம். திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, நாகசதுர்த்தி நாளில் விரதம் மேற்கொள்ளலாம். நாகசதுர்த்தி அன்று வாசலில், சிறிய அளவில் பாம்புக்கோலம் இட வேண்டும்.  பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர்,துர்க்கையை மனதில் நினைத்து, செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். சதுர்த்தி என்றால் நான்கு. இந்த நான்கு என்ற அலைவரிசை எண் கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும். எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று  வழிபடுவது மிகவும் விசேஷமாகும். ஆடி மாதம், வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தி திதியில் நாக சதுர்த்தியையும்,  ஐந்தாம் நாளாகிய பஞ்சமி திதியில் நாக கருட பஞ்சமியையும் கொண்டாடுவார்கள்.நாகசதுர்த்தி அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு. நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம். நாகதோஷம் உள்ளவர்களும் ராகு, கேது தோஷங்களால் பாதிப்பு உள்ளவர்களும் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து நாகதேவதையை வழிபட்டு அனுசரிப்பதே நாகபஞ்சமி விரதம். ஆடி
பஞ்சமி முதல் ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்றுஇந்த விரதத்தை மேற்கொண்டு 12ம் மாதமானஆனிமாத வளர்பிறை பஞ்சமி அன்று விரதத்தை முடிப்பர்.புற்றுகளுக்கு சந்தனம், குங்குமம் இட்டு நாகத்தை வழிபடுவதோடு, புற்று மண்ணைப் பிரசாதமாக எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதுண்டு.

நாக தோஷம் விலக
நாக சதுர்த்தி மற்றும் பஞ்சமி நாட்களில் நிலத்தைத் தோண்டுவதோ, உழுவதோ, மரங் களை வெட்டுவதோ கூடாது என்ற கட்டுப் பாடு உண்டு. தேவர்களும் அசுரர் களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது முதலில் வெளிப் பட்ட ஆலகால விஷத்திலிருந்து  மக்களைக் காப்பாற்ற சிவபெருமான்  விஷத்தை அருந்திய போது கீழே சிந்திய துளிகள் நாகங்களுக்கு விஷத்தை அளித்ததாகவும்,  அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள நாக சதுர்த்தி அன்று  நாகங்கள் வழிபடப்படுவதாகவும் கூறப்படுகிறது.  சிக்மகளூர் டவுனிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலுள்ள ஹிரேமகளூர் பிரதேசத்தில் அமைந்துள்ள கோதண்ட ராமஸ்வாமி கோயில் உள்ள இடத்தில் .சர்ப்ப யாகம் செய்ததன் நினைவாக  ராஜா ஜனமேஜயனால் எழுப்பப்பட்ட ஒரு கற் தூணை, நாக பஞ்சமியன்று தரிசித்தால் நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

இந்தியாவின் ஒரே பாம்பு கோயில்!

இந்தியாவில் பாம்பையே ­மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில் தான்.  மற்ற கோயில்களில் நாகராஜா சிலைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும். நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு உரிய சிறப்பம்சங்களாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்தன.  இன்று மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும். மன்னார்சாலையில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.  தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் ஐந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் விளங்குகிறது. மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பது பற்றி தகவல் இல்லை. எனினும் ஒரு பழமையான கதை இந்த கோயில் பற்றிய தோற்றம் பற்றி கூறப்படுகிறது. கோயில் இருக்கும் இடம் பண்டைய காலத்தில் புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்தது.

இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்து கொண்டிருந்த போது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.  இதை கண்டு அஞ்சிய பெண் கிராம வாசிகளை அழைத்து வந்தார். மக்கள் உடனே அங்கு கோயில் கட்டி வணங்கியதாகவும், பிற்காலத்தில் களக்காடு மன்னரின் தீராத தொழு நோய் இந்த கோயில் வழிபாட்டின் ­லம் குணம் அடைந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலின் உள்ளே செல்லும் போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்றும், பத்மாவதி என்ற நாகராணி எனவும் நம்பப்படுகிறது.  இந்த கோயிலின் கருவறை இன்றும் ஓலை கூரையின் கீழ்தான் உள்ளது.  இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது. இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக உள்ளது.  ­மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். ­மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. இங்கிருந்து மண் எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது அதிசயமாகும். திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும்  பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர்.  பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்லமிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.  ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெண்கள் கூட்டம் அலை மோதும். ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நன்று நாகருக்கு பால் ஊற்றுவதை காணமுடியும்.  ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது.  திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும், கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும்.

கார்த்திகை மாத நாக வழிபாடு

கார்த்திகை மாதத்தில் நாக புஜை காஞ்சிபுரம் காச்சபேஸ்வரர் கோவில்லில் சிறப்பாக நடைபெறுகிறது. நாக தோஷத்தை நிவாரத்தி செய்ய இங்கு உள்ள நாகங்களை வழிபட்டால் தோஷம் நீங்கும்.

 நாகவழிபாடு செய்யும் முறைகள் :

புற்று இருக்கும் இடத்தைச் சுற்றி முதலில் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும். தினமும் காலையும், மாலையும் விளக்கேற்றிப் பால் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. சூடம் ஏற்றி வழிபாடு செய்து புற்றுக்குப் பால் ஊற்றினால் நல்லது நடக்கும்.  புற்று முழுவதும் மஞ்சளைப் பூசி, அங்கங்கே குங்குமப் பொட்டு வைப்பது தமிழ்நாட்டில் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. சில பெண்கள் புற்றுக்கு முன்பாகப் பொங்கல் இட்டு படைப்பதுண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறப் பிரார்த்தித்து மஞ்சள் நிற எலுமிச்சையை புற்றின் மீது வைக்கும் வழக்கம் உள்ளது. புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபடுவது போல் வேண்டினால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

நாக வழிபாட்டின் நன்மைகள்!

1) குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல்.
2) மகப்பேறு வேண்டி வழிபடுதல்.
3)  பிரசவம் இடைïறு இன்றி நடைபெற வேண்டி வழிபடுதல்.
4)  கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள்.
5)  நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள்.
6) தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது.
7) குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது.

நிவேதனம்- பிரசாதம்:
நாக வழிபாட்டிற்கு என நிவேதனப் பொருட்கள் உள்ளன.
நிவேதனம்:
புற்று வழிபாட்டில் பாலும், வாழைப் பழத்துண்டுகளும் முக்கிய இடம் பெறுகின்றன. புற்று வழிபாட்டுக்குரிய காணிக்கைப் பொருட்களைக் கருப்புத்துணியில் வைத்து சந்தனம், பூ இவற்றுடன் சேர்த்துப் பொழுது சாயும் நேரத்தில் புற்றில் செலுத்த வேண்டும்.
பிரசாதங்கள்:
நாகத்தை வழிபாட்டு தெய்வமாகக் கொண்ட நாகர்கோவில், கும்பகோணம் சங்கரன் கோவில் உள்பட சில தலங்களில் புற்று மண்ணே பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இத்தலங்களில் உள்ள புற்று மண் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கின்றன. இப்புற்று மண் பல வியாதிகளைக் குணப்படுத்துவதாக நம்புகின்றனர். சில இடங்களில் புற்றிலிருந்து எடுத்த ஒருவித மையைப் பிரசாதமாகக் தயாரித்து வழங்கும் வழக்கம் உள்ளது. இந்த மை பலவித வியாதிகளைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது. குழந்தை இல்லாதவர்கள் நாகத்தை சிலை வடிவில் அமைத்து ஆறுமாதம் தண்ணீரிலும் ஆறுமாதம் நெய்யிலும் வைத்து பூஜை செய்து அரசமரத்தில் வைத்து வழிபடுவார்கள்.

நாக தோஷம் நீக்கும் நாகக்கன்னி வழிபாடு   

கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கொரநாட்டு கருப்பூர். இங்குள்ள சுந்தரேஸ்வரர் கோயிலில் பிராகாரத்தில் அஷ்ட நாகக் கன்னியருக்கு தனிச்சந்நதி உள்ளது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பெட்டி காளியம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு நாகக் கன்னியருக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் முதலான சகல தோஷமும் விலகுகிறது.
வாழ்வில் மாற்றம் பெற! - மண்ணாற சாலை நாகராஜா வழிபாடு!

தன் தந்தையைக் கொன்றதன் காரணமாக, சத்திரியர்கள் பலரையும் அழித்தார் பரசுராமன். அந்த பாவங்களில் இருந்து விமோசனம் பெற விரும்பினார். அதற்காக மகரிஷிகளை அணுகினார். சொந்தமாக ஒரு நிலத்தை பிராமணர்களுக்கு தானம் செய்திட அவர்கள் கட்டளையிட்டனர்.

நாகராஜா அருள்

பரசுராமன் பூமியைப்பெற வருண பகவானை வழிபட்டார். பரம்பொருளான சிவன் அருளிய ‘மழு’ என்ற ஆயுதத்தை சமுத்திரத்தில் இருந்து வீசினார். அந்த மழு சென்று விழுந்த இடம் வரை கடல் விலகியது. அவ்வாறு கிடைத்த பூமியை அந்தணர்களுக்கு தானம் செய்தார். அதுதான் கேரளம்.
உப்புச்சுவை காரணமாக வாழ இயலாமல் மரஞ்செடிகள் கூட முளைக்க முடியாமல் இருந்ததால் வாழ்க்கை நடத்த தகுதியுடையதாக இல்லை என்பதால் மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். இந்த உண்மையறிந்து பரசுராமன் வேதனையடைந்தார். அவர் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். திருமால் அவருக்கு நேரில் காட்சி தந்தார். ‘நாகராஜாவின் அருள்ஒளி எங்கும் பரவினால் மட்டுமே எண்ணியவை நடக்கும். அதற்கு ஒரே ஒரு வழி, நாகராஜா மன திருப்தி கொண்டு அருள்பெற வேண்டும்’ என கூறி மறைந்தார்.

பரசுராமன் தவம்

கேரளம் இயற்கையழகு நிறைந்த நாடாகவும், மரஞ்செடி கொடிகள் நிறைந்ததாகவும், அனைத்து சம்பத்துகளும் நிறைந்த இடமாகவும் மாறிய பின்னரே அங்கிருந்து விலகுவது என பரசுராமன் தீர்மானித்தார். அதற்கு நாகராஜாவை திருப்திப்படுத்த ஏகாந்தமான ஒரு வனாந்திர பகுதியைத் தேடி தன் சீடர்களோடு புறப்பட்டார். கேரளத்தின் தென் பகுதியில் கடலோரத்தின் அருகே தகுந்த ஓர் இடத்தை கண்டார். தன் நீண்டகால திட்டத்திற்கு அனுகூலமான இடமான அங்கே தவம்புரிய ‘தீர்த்த சாலை’ அமைத்தார். தவத்தைத் தொடர்ந்தார். கடும் தவத்தின் காரணமாக நாகராஜாவின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவரிடம் கரம் குவித்து மெய்சிலிர்க்க தன் வேண்டு தலை தெரிவித்தார். நாகராஜா, பரசுராமனின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். கொடிய விஷக் கதிர்களை பரப்பிட, பயங்கரமான நாகங்கள் உடனடியாக அங்கு தோன்றின. விஷ ஒளிக்கதிர்கள் மூலம் கேரள பூமி முற்றிலும் நாக பூமியாக மாறியது. நாகராஜா எந்தவித தயக்கமும் இன்றி, அதை ஏற்றுக்கொண்டார்.

சிஷ்ய முக்கியத்துவம்
தனது சிஷ்யர்களில் முக்கியமான ‘விப்ரனைநாக பூஜை செய்யும் அதிகாரியாக தேர்ந்தெடுத்தனர். அவருடைய வம்சத்தில் பிறப்பவர்களுக்கு நாக பூஜையின் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி அவதார நாதனான பரசுராமன் ஆசி அருளினார். வனப்புமிக்க சோலையாக இயற்கை எழிலுடன் காட்சி தரும் இந்த சாலைக்கு வந்து வழிபடுவோருக்கு நாகராஜா தனது பரிவாரங்களுடன் அருள் பாலிப்பதால், இந்த சோலை மந்தார சோலை எனும் பெயரில் மருவி பிரபலமாகி உள்ளது. தலைமுறைகள் பல கடந்தன  – வம்சம் கடினமான துக்கக்கடலில் வீழ்ந்தது. இந்த நிலையில் பொறுப்பினை ஏற்றிடும் நிலைக்கு வந்தவர்கள் வாசுதேவனும் ஸ்ரீதேவியும் ஆவர். அந்தத் தம்பதிகளின் நீண்டகால தவ வலிமையின் காரணமாக அவர்களுக்கு நாகராஜா காட்சியளித்தார். இவ்வேளையில் நாகராஜாவின் வாழ்விடத்தின் சுற்றுமுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. அக்னியின் கோரத் தாக்குதலில், பல இடங்களிலும் வாழ்ந்து வந்த சர்ப்பங்கள் (பாம்புகள்) உயிருக்கு பாதுகாப்பு தேடி, நாகராஜாவின் பாதங்களை சரணடைந்தன. இதையடுத்து காட்டுத் தீ முழுவதுமாக அணைந்து ஓய்ந்தது. தீயின் வெப்பம் தணிந்து, மண் முழுமையாக ஆறிய சாலை, ‘மண்ணாற சாலை’யானது.

மகப்பேறு பாக்கியம்

மண்ணாறசாலை நாகராஜா கோவில் முக்கிய வழிபாடுஉருளி கவிழ்த்தல்’. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இக்கோவிலுக்கு வந்து, நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. பல நாடுகளில் இருந்து ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை–வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

ஐப்பசி ஆயில்யம்

பண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. நாகராஜா கோவில்களில் புராட்டாசி மாத ஆயில்யம் தினம் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படும். மண்ணாறசாலை நாகராஜா தலத்திலும் அதே போல், புராட்டாசி மாத ஆயில்யம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினத்தில் இறைவனை தரிசனம் செய்வது, திருவிதாங்கூர் மன்னர் களிடம் ஒரு விரதமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஒரு முறை வழக்கம்போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்த துலாம் (ஐப்பசி) மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளையும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் கோவில் சொத்துக்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டது. அதில் இருந்து ஐப்பசி மாத ஆயில்ய தினமும் மாபெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் ஆயில்யம் விழா தொடர்ந்து கோலாகலமாக நடைபெறுகிறது.

மகா சிவராத்திரி

சிவ ஆலயங்களில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த விழா சிவராத்திரி ஆகும். இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினம் முக்கிய விழாவாக கருதப்படுகிறது. அதன்படி பல கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நாகராஜா பிரதிஷ்டை, சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயத்தில் காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷ கால பூஜை, 10 மணிக்கு உச்சிகால பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடைதிறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

நாக  தோஷ  வழிபாடு

நாக தோஷம் இருப்பவர்களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கான வழிபாடு களும் பரிகாரங்களும் உள்ளன.

1) செல்வ செழிப்புக்கு – தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும்.
2) கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு பெறுவதற்கு – பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்க வேண்டும்.
3)  உடல் நலம் பெற – உப்பு காணிக்கை செலுத்த வேண்டும்.
4) விஷத்தன்மை நீங்கிட – மஞ்சள் காணிக்கை செலுத்தலாம்.
5) ஆரோக்கிய வாழ்வுபெற – நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தலாம்.
6) சர்ப்ப தோஷபரிகாரத்திற்கு – தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள் வாங்கி சமர்ப்பிக்கலாம்.
7)  நீண்ட ஆயுள் பெற – நெய் காணிக்கை செலுத்த வேண்டும்.
8)  நினைத்த காரியம் கை கூடுவதற்கு – பால், கதலிப்பழம், நிலவறை பாயாசம் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
9) குழந்தை பாக்கியத்திற்கு – மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
10) மரங்களின் செழிப்புக்கு – மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் சமர்ப்பிக்க வேண்டும்.
11) நாக தோஷ பரிகாரத்திற்கு – மஞ்சள் பொடி காணிக்கை, பால்– பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம்.

பூர்வீக நாகதம்பிரான் ஆலய வரலாறு

பலரும் பலவாறு கூறினாலும் நாகர்கோவில் என்னும் பெயர் ஆதிகாலத்தில் நாகர் சாதியினர் வாழ்ந்த காரணத்தினால் ஏற்ப்பட்டது என்று கூறுவதே ஏற்புடையதாகும். நாகர் சாதியினர் நாக வணக்கத்தை உடையவர்களாகவும், தமது அரனைஃதலைவனை ‘தம்பிரான்’ என்று அழைக்கும் வழக்கத்தினைக் கொண்டீருந்தனர் எனவும் அறிய முடிகிறது. இதன்காரணமாகத் தமது குலதெய்வத்திற்கு நாகதம்பிரான் என்ற பெயரைச் சூட்டிவழிபட்டு வந்துள்ளனர் என எண்ணுவதற்கு இடமுண்டு. பிற்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படையெடுப்பின்போது இக்கிராமம் அவர்கள் வசப்பட்டதாகவும் அங்கிருந்து வந்த தமிழர்களே இக்கிராமத்தில் குடியேறினார்களெனவும் எம்மவர் கூறுவர். இதற்கு ஆதாரபூர்வமான சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முன்பு நாகர் வழிபாடுசெய்த மரவடியில் திருவருள் விளங்கக்கண்டு இவர்களும் அம்மரவடியில் வழிபட்டு வந்தனர் என்றும்,இவர்களுக்கும் எம்பெருமான் அருள்பாலித்து வந்தாரெனவும் அறியப்படுகின்றது.

இவர்களுள் மோகாம்புரி என்னும் பெயரையுடைய பொற்கொல்லன் ஒருவன் சிறந்த பக்திமானாக வாழ்ந்து வந்தாரெனவும், ஒருநாள் இவ்வூர்அரசன் இப்பொற் கொல்லனைத் தனது அரண்மனைக்கு வருவித்து தனது பிரசைகள் வழிபடுவதற்கு ஒரு திருவுருவை அமைத்துத் தரும்படி பணித்தானாம். அரசனின் ஆணையை மீறமுடியாத பொற்கொல்லன் செய்வதொன்றும் அறியாது இம்மரவடிக்குச் சென்று ‘இம்மரவடித் தெய்வம் எத் தெய்வமோ யான் அறியேன்’ இவ்வுருவை யான் எப்படி வடிப்பேன். இறiவா! நீதான் எனக்கு அருள்புரிய வேண்டும் என்று எம்பெருமானை வேண்டி நின்றானாம். நம்பினார்க்கு அருள்புரியும் நாகதம்பிரான் அன்று அவனது கனவிலேதோன்றி அன்பனே! கவலைப்படாதே ஆதிநாதனின் திருவுருவத்தை நீவழிபடும் அத்தி மரத்தில் காண்பாய். அதன்படி அரசனின் பணியை முடிப்பாய் என்றுகூறி மறைந்ததாம்.அவ்வாறே மறுநாள் வைகறையில் எழுந்து மனக் களிப்புடன் தான்வழிபடும் மரவடியில் சென்று பார்த்பொழுது விழுதேவிடாத அத்தி மரத்தில் விழுது ஒன்று ஐந்துதலை நாகரூபமாய் ஆடக்கண்டு அகம்குளிர்ந்து மெய்சிலிர்த்து ஆடிப்பாடி வீடுசென்று தனது கைப்பட தாமிரத்தாலான ஐந்துதலை நாக படத்தினை வடித்து அரசன் பணியை முடித்து எம்பெருமானின் அருளைப்பெற்றான் என நம்முன்னவர் கூறும் காணாபரம்பகை; கதையொன்றினை அவர்கள் கூறக்கேட்டு அறிந்து உள்ளோம். அன்று முதல் அத்திரு நாகபடமே இத்தல மூலமூர்த்தியாக விளங்கி அருள் பாலித்து வருகின்றது. இப்பூர்வீக நாகதம்பிரான் ஆலய வழிபாடு எப்பொழுது ஆரம்பமானது என்று எவராலும் கூறமுடியாது.எனினும் இப்பகுதி மக்களினால் பேசப்படும் கர்ணாபரம்பரைக் கதைகள்மூலம் இப்பகுதியில் நாகர் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றியிருக்கலாம் என எண்ணுவதற்கு இடமுண்டு.

இம்மரவடியில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பூர்வீகநாக தம்பிரானுக்கு பிற்காலத்தில் பரமாந்தர் இரகர் என்பவர் களிமண்ணால் ஒரு சிறுகோவில் அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்தார் என்று அறியப்படுகின்றது.அதன்பின் அவர்களது பரம்மரையில் வந்த சிதமபரர் இரகர் என்பவர் சிறிய கோவிலாக இருந்த இக்கோவிலை 1845ம் ஆண்டிலே பெரிதாக களிமண்ணினால் அமைத்து பூசை ஆராதனைகளை மேற்கொண்டு வந்தார் இறுதியாக இவர்கள் பரம்பரையில் வந்த முருகேசு சதாசிவம் என்பவர் 1924ம் ஆண்டுமுதல் 1933ம் ஆண்டு வரை இக்கோவில் பூசகராக இருந்து வந்தார். அவர் காலமானதின் பின் இக்கோவில் பூசை ஆராதனைகளுக்கு பிராமணர்கள் நியமிக்கப் பட்டார்கள். அன்றுமுதல் இக்கோவில் பரம்பரையில் வந்த திருமதி. முருகர் சிவக்கொழுந்து பரம்பரை நம்பிக்கைப் பொறுபாளராகவும் முகாமையாளராகவும் செயற்பட்டு வந்தார்;;. பின்னர் அவரது மகன் திரு.முருகர் சிதம்பரப்பிள்ளை 1978ல் ஆலய பரிபாலன சபை ஒன்றினை ஏற்படுத்தி பரம்பரை நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.அவரது தலைமையில் இக்கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. 2000ம் ஆண்டில் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின் 2009ம் ஆண்டு முதல் பரம்மரை நம்பிக்கைப் பொறுப்பாளராக தலைவராக அவரது மகன் திரு.சிதம்பரப்பிள்ளை இராஜறஞ்சன் செயற்பட்டு வருகிறார். அவர் ஆலயபரிபாலன சபையிருடன் இணைந்து நாகதம்பிரானின் திருப்பணி வேலைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்பொழுது சைவசமயத்தவர்களாகிய நம்மவர் சிவலிங்கத்தை உள்ளடக்கிய ஐந்துதலை நாகபடத்தையே இத்தல மூலமூர்த்தியாக கொண்டு வழிபட்டு வருவதைக்காணலாம். இங்கு நடைபெறும் பூசை நைமித்தியங்கள் யாவும் சிவனுக்கு உரியதாகவே நடைபெற்று வருவதினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

எல்லைகள்

இவ் ஆலயத்தின் வடக்கே பிரசித்திபெற்ற நாகர்கோவில் கண்ணகை அம்மன்,நரசிங்க வைரவர், வீரபர்திரர்ஆலயங்களும். மணல்மேடுகளும் நாவல் மரங்களும் தெற்கே வயல் நிலங்களும், பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியும்,தொண்டமானாறு கடல்நீர் ஏரியும்,கிழக்கே சுடலைப்பிட்டி பிள்ளையார். குடாரப்பு முருகையா ஆலயங்களும் வயல் நிலங்களும், மணல்மேடுகளும்,பனை,தென்னை மரங்களும். மேற்கே பெரியதம்பிரான், நாச்சிமார் ஆலயங்களும் வயல் நிலங்களும், பனை,தென்னை மரங்களும் அம்பன் கிராமமும் உண்டு.

தல தீர்த்தம்

இத்தலத்திற்கு அருகாமையில் ஐந்து வகையான தீர்த்தங்கள் உண்டு. இவற்றில் பெண்டுகள் கேணி சக்தி தீர்த்தமெனவும், உப்புக்கேணி சமுத்திர தீர்த்தம் எனவும், நாககேணி நாகேஸ்வரப்பெருமான் தீர்த்தமாடும் நாக தீர்த்தமெனவும், திருவெம்பா காலத்தில் நடராசர் தீர்த்தமாடும் சம்புக்கேணி சிவதீர்த்தம் எனவும், மார்கழிக்கேணி தனுதீர்த்தம் அல்லது பிண்டதீர்த்தம் எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு ஐந்து வகை தீர்த்த விசேடம் பொருந்திய புண்ணிய தலமாக விளங்குகிறது.

அற்புதங்கள் – கோவில்மருந்து

ஆதிமுதல் இன்றுவரை இக்கிராம மக்கள் எவ்வித கொடிய விஷஜந்துக்கள் தீண்டினாலும் வைத்தியம் செய்வது கிடையாது. ஆதிமூலம் நாகதம்பிரானில் நம்பிக்கை உடையவராய் நாகேஸ்வரர் தீர்த்தமாடும் குளவாளைகள் நிறைந்த நாககேணியில் உள்ளநீரினை எடுத்து  அவரது சன்னிதியில் கிடைக்கும் அருமருந்தினை அந்நீரிலே கரைத்து உட்கொண்டும், கடி இடத்தில் பூசியும்வரச் சுகமடையலாம். இதனை நாம் இன்றும் காணலாம். இவ் அற்புத மருந்துதான் என்ன எனஅறிய யாவரும் விரும்புவர்.மருந்தின் மகிமையைக் கூறலாமேயன்றி மருந்தின் தன்மையைக் கூறவல்லவர் எவருமில்லையெனலாம். திருவருளேறிய திருமண் மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும் நம்பினவற்கே நன்மை பயக்கும். நம்பினாற்கு நஞ்சறும். நம்பாதாற்கு மிஞ்சிடும். இவ்வற்புத மருந்தின் மகத்துவத்தை அனுபவரீதியாகக் கண்ட அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவேண்டி இப்பூர்வீக நாக  தம்பிரான் ஆலயத்திற்கு வருகைதந்து கொண்டிருப்பதை இன்றும் நாம் காணக்கூடியதாக உள்ளது.’திருமருந்து’ அழியாது நிலைத்துநிற்க நாகதம்பிரானின் நல்லருளும் அனுக்கிரகமும் கிட்டுவதாக

கோவில் எண்ணெய்

நாகேஸ்வரப் பெருமான் தீர்த்தமாடும் குளவாழைகள் நிறைந்த நாககேணியில் தீர்த்மாடி ஆதிமூலம் நாகதம்பிரானின் மூலஸ்தானத்தில் எரிக்கப்படும் விளக்கின் எண்ணெயைப் பூசிவர விஷக்கடி காணக்கடி ஆகியவற்றால் ஏற்படும் புண்கள், குட்டை, சிரங்கு முதலிய நோய்பிணிகள் நீங்குவதாக எமது கிராமமக்கள் நம்புகின்றனர். இப்பொழுதும் இக்கிராம  மக்களில் பெரும் பாலானவர்கள் பூசை வழிபாடுகள் முடிவடைந்த பின்னர் இவ்வாலயத்தின் மூல ஸ்தானத்தில் எரிக்கப்படும் விளக்கின் எண்ணெயினைப் பெற்றுச் செல்வதைக் காணலாம்.


சகல தோஷம் போக்கும் சர்ப்ப பூஜை

சர்வ வல்லமை படைத்த நாக தேவதைகளுக்கு ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி என்றால் நான்கு. இந்த நான்கு என்ற எண் அலைவரிசை எண் கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும். எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று வழிபடுவது மிகவும் விசேஷமாகும். நாகங்களை பற்றி பல புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது. நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை பெறுகிறது. அம்மன், சிவன், முருகன் ஸ்தலங்களில் நாக வாகன புறப்பாடு மிக விமரிசையாக நடக்கும்.

நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், காளியம்மன், மாரியம்மன் என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி. திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன், நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக் கோயில் உள்ளது. பாற்கடலில் பரந்தாமன் பாம்பு படுக்கையில் பள்ளி கொண்டிருப்பதாக விஷ்ணு புராணம் விவரிக்கிறது. புராண இதிகாசகங் களின் படி சமுத்திரத்தின் அதள பாதாளத்தின் கீழே பூமியை தாங்கியபடி ஆதிசேஷன் இருப்பதாக பாகவத புராணம் உள்ளிட்ட பல புராணங்கள் கூறுகின்றன. இதை சிலர் கட்டுக்கதை என்று சொல்வார்கள், ஆனால் நவீன விஞ்ஞான உலகத்தில் கடலுக்கு உள்ளே அதள பாதாளத்தில் ‘பாம்பு பாறை‘ இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஜோதிட சாஸ்திரப்படி நாகங்கள் ராகு, கேது என்ற பெயரில் கிரகங்களாக பரிபாலனம் செய்கின்றன. ராகு, யோக போகங்களுக்கும் கேது மோட்சம், ஞானத்திற்கும் அதிபதியாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமான திருமண விஷயத்திலும், குழந்தை பாக்யம் அருள்வதிலும் தோஷத்தை ஏற்படுத்துவது இந்த ராகு கேதுதான். நாக தோஷம், சர்ப்ப தோஷம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ராகு-கேதுவுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம். குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும். இத்தகைய கடுமையான தோஷங்களை ஏற்படுத்தும் நாகங்களின் அம்சமான ராகு-கேதுவை நாக சதுர்த்தி தினத்தில் மனமுருகி வழிபட்டால் சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.

பரிகார ஸ்தலங்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமனியில் உள்ளது நாகநாத சுவாமி ஆலயம். ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்தில் இருந்து வந்ததால் பாதாளேச்சரம் என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு.  மனித முகமும், பாம்பு உடலும் கொண்ட ஆதிசேஷனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ராகு-கேது உள்பட சகல நாகங்களுக்கும் தலைவன் ஆதிசேஷன் என்பதால் இங்கு வந்து வழிபட்டு, பிரார்த்தனை செய்தால், சகல நாக தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்யத்திற்காக இங்கு அதிக அளவில் வேண்டுதல் செய்கிறார்கள்.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜ சுவாமி கோயிலில், நாகராஜன் சுயம்புவாக தோன்றி அருள்பாலிக்கிறார். இது பிரார்த்தனை ஸ்தலமாகும். ராகு, கேது சம்பந்தமான எல்லா தோஷங்களுக்கும் இங்கு வேண்டுதல் செய்யலாம். ராமாவதாரத்தில், ஆதிசேஷன், லட்சுமணராக அவதாரம் எடுத்தார். லட்சுமணரின் நட்சத்திரம் ஆயில்யம் என்பதால் இங்கு ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அந்த நட்சத்திரத்தில் இங்கு வழிபடுவது சிறப்பாகும். ஸ்ரீபெரும்புதூர் அல்லது ஸ்ரீரங்கம் சென்று ராமானுஜருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். அவரை திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பாகும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், கீழ் பெரும்பள்ளம் ஆகியவையும் நாக பரிகார ஸ்தலங்களாகும்.


கருட பஞ்சமி

ஆடி மாதத்தில் வருகின்ற பல்வேறு விசேஷங்களில் கருட பஞ்சமியும் ஒன்று. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், பெருமாள் வழிபாடும் சகல பாவ, தோஷங்களை போக்கி சுப யோகத்தை அமைத்து கொடுக்கும் திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை கருட பஞ்சமி என வழிபடுகிறோம். கருடனைப் போல பலசாலியும், புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக தாய்மார்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருடன் மீது வரும் சேவை மிகவும் விசேஷம். ‘ஆழ்வார்‘ என்ற சிறப்பு பெயர் கருடனுக்கு உண்டு. பெருமாளின் தலைக்கு மேலே கருடன் கொடியாகவும், பெருமாளின் காலிற்கு கீழே வாகனமாகவும் காட்சி தருகிறார். விஹாகேஸ்வரன் வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் கருடனுக்கு உண்டு. கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமான ஒன்றாகும்.

மேலே பறக்கும் கருடனின் நிழல் பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புகிறார்கள். கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை வெல்வதற்கும், விஷங்களை முறிக்கவும், மந்திர, தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவும் கருட மந்திரம் நல்ல பலன் தரும். கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கி பிடித்து, நாகங்களை ஆபரணமாக தரித்துள்ளதால் ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும்.

ஏழரை சனி, கண்ட சனி போன்ற கோச்சார சனி நடப்பவர்கள் கருட பஞ்சமியன்று வணங்கி வழிபட தோஷங்கள் நீங்கும். கருட பஞ்சமியன்று காரைக்காலில் ஏழு கோயில்களை சேர்ந்த பெருமாள்கள் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி அருள்புரிகிறார்கள். பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். மனகுழப்பம், மனசஞ்சலம், தரித்திரம் நீங்கும்.

 சகல தோஷம் போக்கும் சர்ப்ப பூஜை
நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்
நாகதோஷம்...நிரந்தர தீர்வு ..
நாக தோஷம் நீக்கும் நாகக்கன்னி வழிபாடு
பூர்வீக நாகதம்பிரான் ஆலய வரலாறு
பல்லாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த நாக வழிபாடு
இந்தியாவின் ஒரே பாம்பு கோயில்!
நாக வழிபாடு
ஆடி மாதத்தில் நாக பூஜை
உன்னத பலன் தரும் நாக பஞ்சமி
நாக வழிபாடும், நாக தோஷமும்
நாக சதுர்த்தி
நலம் நல்கும் நாக சதுர்த்தி
கார்த்திகை மாத நாக வழிபாடு
இந்தியாவில் நாக வழிபாடு.
நாகவழிபாடு செய்யும் முறைகள்
வரலாற்றில் நாகர்கள்
நலம் தரும் நாக சதுர்த்தி
நாகசதுர்த்தி வழிபாடு - தமிழ்
நாக நாட்டு குகைக் கோயில்



1. பாக்டீரியாவிலிருந்து டீசல் எண்ணெய்:: விஞ்ஞானிகள் வெற்றி, 2. மனித கருமுளையத்தை மரபணு ரீதியில் மாற்றியமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முதல் தடவையாக வெற்றி பெற்றுள்ளனர்., 3.  நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள்மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.